ஸ்ரீநகர், அக். 14 - ஜம்மு - காஷ்மீரில் கடந்த 6 ஆண்டுகளாக அமல் டுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை, கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த ஒன்றிய பாஜக அரசு, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேச ங்களாகப் பிரித்து, குடி யரசுத் தலைவர் ஆட்சியை யும் அமல்படுத்தியது. கடந்த 5 ஆண்டுகளாக சட்ட மன்றத் தேர்தலையும் நடத்த வில்லை.
அதன்பிறகு, உச்ச நீதி மன்ற உத்தரவின் பேரில், தற்போது தேர்தல் நடத்தப் பட்டு- அதில், பாஜக தோற் கடிக்கப்பட்டு, இந்தியா கூட் டணி வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிர தேசத்தில் பேரவைத் தேர்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு பொறுப்பேற்க வழி வகுக்கும் வகையில் அங்கு 5 ஆண்டுகளாக அம லில் இருந்த குடியரசுத் தலை வர் ஆட்சி திரும்பப் பெறப் பட்டுள்ளது.
குடியரசுத் தலைவா் திரௌ பதி முா்மு கையொப்பமிட்ட அறிவிக்கையை, ஒன்றிய உள் துறை அமைச்சகம் ஞாயிற்று க்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் 73-ஆவது பிரிவில் வழங்கப் பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, யூனியன் பிர தேசத்தில் அமலில் இருக் கும் குடியரசுத் தலைவா் ஆட்சி ஜம்மு - காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் 54-ஆவது பிரிவின்கீழ் முதல்வா் நியமிக்கப்படு வதற்கு முன் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புதிய அரசின் பதவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. காங்கிரஸ், சிபிஎம் கட்சி களை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணி சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்க உள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட லாம் என்று கருதிய ஒன்றிய பாஜக அரசானது, ஆளுநர் மூலம் 5 பேரை நியமன எம்எல்ஏ-க்கள் ஆக்கியது. இவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் என்பதால், பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் இந்த 5 பேரும் பயன்படுவார்கள் என்று கணக்குப் போட்டது.
ஆனால், ‘இந்தியா’ கூட்டணி, பெரும்பான்மை க்குத் தேவையான எண்ணி க்கையைக் காட்டிலும் 4 இடங்கள் கூடுதலாக மொத்தம் 50 இடங்களைப் பெற்றது. தேசிய மாநாடு 42, காங்கிரஸ் 6, சிபிஎம் 1 என இடங்களைப் பெற்றிருந் தன. ஆம் ஆத்மி கட்சி ஆதரவின் மூலம் இந்த எண்ணிக்கை 50 ஆனது.
இதனிடையே, தேசிய மாநாட்டுக் கட்சியானது, 4 சுயேச்சைகளின் ஆதர வையும் பெற்று, எம்எல்ஏ-க்களின் பலத்தை 54 ஆக உயர்த்திக் கொண்டது.
இதனால், ஆளுநரின் நியமன எம்எல்ஏ-க்கள் முயற்சி பாஜகவுக்கு பலனளிக்காமல் போனது.
உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற் பதும் உறுதியாகி இருக்கிறது.
ஜம்மு - காஷ்மீரில் பாஜக வுக்கு 29 இடங்கள், மக்கள் ஜனநாயக கட்சி 3, ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி 1, சுயேச்சைகள் 3 என இடங்களைப் பெற்றுள்ள னர்.